ஜென் எருமை - Zen Buffalo by Eswari Nagarajan

ஈஸ்வரி நாகராஜனின் அடுத்த புத்தகமான 'ஜென் எருமை - Zen Buffalo' என்ற புத்தகம் அமேசான் தளத்தில் வெளிவந்திருக்கிறது. ஜென் குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு வழங்கிய சுவாரசியமான போதனைகளை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் அழகாக விவரித்திருக்கிறார். 

இந்தக் காலத்து வாழ்க்கை முறை, ஊடகங்கள், உணவு ஆகியவை நம் உண்மையான இயல்பை மாற்றிவிட்டன. நிம்மதி என்பது வெளிப் பொருள்களில் தான் இருக்கிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனம் போகும் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மனம் என்பது என்ன என்பதை உணர்ந்தால் தானே அதை எதிர்கொள்ள முடியும். அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால்தானே நிம்மதி பிறக்கும்.

மனம் எனும் சூட்சுமத்தை அறிய ஜென் உதவுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில், அதாவது 1500 வருடங்களுக்கு முன்பு போதிதர்மர் என்ற ஒருவர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். சீனத்திற்கு சென்று அவர் பெற்ற ஞானத்தை அந்த மக்களுக்கு அளித்தார். அதுவே ஜென் ஆனது. அதை சான் என்றும் கூறுவர்.

யாரடா இந்த தாடிக்காரன். காட்டான் போல இருக்கிறான். எருமை மாட்டின் மீது சவாரி செய்கிறான். ஆனால் உண்மையை இப்படி போட்டு உடைக்கிறான், என்று அரண்டு போனார்கள் சீனர்கள். அந்த நாட்டு அரசனே போதிதர்மரின் ஞானத்தை கண்டு கதிகலங்கிப் போனான்.

ஜென் என்பது ஏதோ ஒரு உன்னத நிலையை பெற்றுத்தர போவதில்லை. நடக்கும்போது நடக்க வேண்டும். சாப்பிடும்போது போது சாப்பிட வேண்டும். உக்காரும்போது உக்கார வேண்டும். நிகழ்காலத்தின் அருமையை விளங்க வைக்கிறது ஜென். எண்ணங்களின் மாயையைக் களைந்து உண்மையை உணர்த்துகிறது ஜென்.

சிலருக்கு குழப்பத்திலிருந்து தெளிவு பிறக்கும். சிலருக்கு ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ளும்போது தெளிவு பிறக்கும். இதில் ஜென் முதல் ரகம். ஜென் குருமார்கள் குழப்பத்திலிருந்து ஞானம் அடைந்தவர்கள். வார்த்தைகளை சாதுரியமாக பிரயோகித்து தன் சீடர்களை தெளிவடைய வைப்பதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்தக் கதைகளை உடனே புரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சிக்க வேண்டாம். அதன் கருத்தை ஆராய வேண்டாம். ஒரு குழந்தை படிப்பது போல படியுங்கள். ஒரு கதையை படித்துவிட்டு அதனுள் மனதை ஊடுருவவிடாமல் அதை கவனியுங்கள். தெளிவு பிறக்கும்.
உண்மை கண்முன்னே இருக்கிறது. அதில் எண்ணங்களை போட்டு கிளற வேண்டாமே!
போதிதர்மர் வளர்த்த இந்த ‘ஜென் எருமை’ அனைவருக்குள்ளும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த புத்தகத்தை அமேசான் தளத்தில் இ-புத்தகமாக வாங்கிப் படிக்கலாம்.




ஈஸ்வரி நாகராஜன் எழுதிய பிற புத்தகங்களை அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது. Eswari Nagarajan என்ற இடுகையில் இவை உள்ளன.

1) மனக்கூண்டு - மனதை பற்றி எவரும் அறியாத உண்மைகள்

2) மனம்: அறியப்படாத ரகசியங்கள் (மனக்கூண்டு Book 2)

3) எண்ணங்கள் உருவாக்கிய மனிதன் (மனக்கூண்டு Book 3)

4) மனம் பொருள் ஏவல் (மனக்கூண்டு Book 4)

5) நாசூக்காக வாழ்வது எப்படி - இது பள்ளிக்கூடங்களில் கற்றுத்தராத  வாழ்க்கைப் பாடம்.

6) நாசூக்காக வாழ்வது எப்படி? Book 2

7) ஜென் முட்டாள் - அர்த்தங்களின் மாயை

8) டுவிஸ்ட் குறுங்கதைகள்

9) மனம் - எண்ணங்களின் குவியல்

GET IT HERE


தொடர்புக்கு

eswarinagarajan21@gmail.com






மனம் பொருள் ஏவல் - Mind Matter and its Application | New Book Release

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். மனக்கூண்டு வரிசையில் நான்காவது புத்தகமான 'மனம் பொருள் ஏவல் - Mind Matter and its Application'  என்ற புத்தகம் அமேசானில் வெளியாகி இருக்கிறது. மனதை அறியும் முறைகள், பொருளை வைத்து மனதை பழக்கப்படுத்தும் வழிகள், பழக்கப்பட்ட மனதை நமக்கேற்ப செலுத்தும் முறைகளை இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறேன். 

மற்ற மூன்று பாகங்களைப் போல இந்த புத்தகத்திலும் பல சுவாரசியமான கதைகள் நிறைந்துள்ளன. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். படித்துவிட்டு உங்கள் கருத்தை அமேசானில் பதிவிடுங்கள். 

நான் எழுதும் கதைகள், என் மனதில் தோன்றும் எண்ணங்கள், அணுத்துகள் தளத்தில் வெளியாகும். இந்த தளத்தை பிந்தொடர்ந்து தங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி!

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: eswarinagarajan21@gmail.com



அவதாரம் - ஆன்மிகக் கதைகள்

ங்களை நோக்கி விண்வெளியிலிருந்து ஒரு மாபெரும் எரிகல் வருவது தெரியாமல் தேவர்களும் அசுரர்களும் போரிட்டு கொண்டிருந்தனர். 

அந்த உலகத்தில் தலைமுறை தலைமுறையாக தேவர்களும் அசுரர்களும் பரம எதிரிகளாக இருந்து வந்தனர். அவர்கள் எந்நேரமும் போர் புரிந்து கொண்டே இருந்தனர். அந்த சண்டை பல தலைமுறைகள் நீடித்தது. 

எது மூடநம்பிக்கை? - ஆன்மிகக் கதைகள் | Spiritual Story

ன்று அந்த சிவன் கோயிலில் மிகுந்த கூட்டமாக இருந்தது. பக்தர்கள் கடவுளிடம் தங்கள் விண்ணப்பங்களையும் மனதில் சுமக்கும் பாரங்களையும் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். 

போதிதர்மர் கேட்ட கேள்வி - ஜென் கதை | Zen Story in Tamil

சீன நாட்டை ஆண்ட அரசன், பல போர்களில் வெற்றி கண்டவன், மன நிம்மதி இல்லாமல் தவித்தான். ஒரு நாள் போதிதர்மர் என்ற துறவி தன் நாட்டுக்கு வந்திருப்பதை கேள்விப்பட்டான்.

ஆசையின் விளிம்பில் - ஆன்மீக சிந்தனைகள் | Tamil Spirituality #25

மனிதன் விழித்ததும் அமைதியை தொலைக்கிறான். அவனை பல எண்ணங்கள் வந்து ஆட்கொள்கிறது. அப்படியே தன்னையறியாமல் எண்ணங்களில் மூழ்கி விடுகிறான்.

தியானமும் சித்துகளும் - ஆன்மீக சிந்தனைகள் | Tamil Spirituality #33

அவன் கடவுளை தன் ஊருக்கு அழைத்து வருவதாக கூறி அந்த குகைக்குள் சென்றான். 

முதலில் அவனுக்கு எந்த தொல்லையுமில்லை. அவன் உள்ளே முன்னேறிச் செல்ல செல்ல அவனை  மிருகங்கள் குகைக்குள் செல்ல விடாமல் தடுத்தது. அவன் அதையும் மீறி உள்ளே சென்றான். 

மனதை கட்டுப்படுத்துவது எப்படி? ஆன்மீக சிந்தனைகள் | Learn to Control Mind | Tamil Spirituality #6

மனதின் இரைச்சலை கட்டுப்படுத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். மனம் அவர்களை தன் போக்கிற்கு இழுத்துச் செல்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் மனம் காணாமல் போகிறது. விழித்த ஐந்து நிமிடத்தில் எண்ணங்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

எண்ணங்களின் நாடகம் - ஆன்மீக சிந்தனைகள் | Tamil Spirituality #10

ஒரு நாள் சிஷ்யன் குருவிடம் வந்து புலம்பினான். ‘தூக்கத்திலும் தியானத்திலும் எண்ணங்கள் என்னை விடாது தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன குருவே! நான் எண்ணங்களில் இருந்து விடுபட எனக்கு தாங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்’ என்று மன்றாடினான்.

மனமில்லாமல் இரு - ஆன்மீக சிந்தனைகள் | Tamil Spirituality

ஜென் குரு ஒரு கிராமத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அவரை காண ஒரு வாலிபன் வந்தான்.